புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

வெலிங்டனில் இன்று நடந்த ஆட்டத்தில்,  முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்கள் எடுத்து   ‘ஆல் அவுட்’ ஆனது.
வில்லியம்சன் அதிகபட்சமாக 69 ரன்னும், ரூதர்போர்டு 37 ரன்னும் எடுத்தனர். நுவன் பிரதீப் 4 விக்கெட்டும், லக்மல் 3 விக்கெட்டும், தமிகா பிரசாத் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி, இன்றைய ஆட்டத்தின் முடிவில் 78 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சங்ககரா 33 ரன்னில் ஆட்டம் இழக்காமல் உள்ளார். பிரேஸ்வெல் 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
                                                                                                              

உலகின் முன்னணி வீரரான சங்கக்கரா,  கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

இந்நிலையில் சங்கக்கரா இன்றைய  டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன் களைத்  தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2வது டெஸ்டில், அவர் 33 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். 5 ரன்  எடுத்தபோது அவர் 12 ஆயிரம் ரன்களைத் தொட்டு சாதனை படைத்தார்.
                                                                                                      

130 டெஸ்ட்டில் விளையாடி சங்ககரா 12,028 ரன் எடுத்துள்ளார். அவர் 37 சதமும், 51 அவரை சதமும் எடுத்துள்ளார். டெஸ்டில் 12 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இலங்கை வீரர் ஆவார். உலக அளவில் 5 வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad