புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2015

காணாமற் போன 2000 பேர் குறித்து தீவிர விசாரணைகளிற்கு ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது ஜனாதிபதி ஆணைக்குழு

காணாமற்போன 2 ஆயிரம் பேர் குறித்து தீவிர விசாரணை மேற் கொள்ள வேண்டியுள்ளதால், அவை தொடர்பான ஆவணங்கள் தனியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காணாமற்போ னோர் குறித்து விசாரணை செய் யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில், காணாமற்போன 2ஆயிரம் பேர் தொடர்பில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டங்களு க்கு அமைய விசாரணை செய்யப் பட வேண்டியுள்ளது. 

இதற்காக தனியானதொரு ஆவணப்படுத்தல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய தனியான நிபு ணர் குழுவொன்று தேவைப்படும்.

காணாமற்போனோர் தொடர்பி லான சில விடயங்கள் சர்வதேச மனி தாபிமான மற்றும் மனிதவுரிமை  சட்டங்களுடன் தொடர்புடையவை. 

இவ்வகையான முறைப்பாடுகளை தனியாக விசாரணை செய்ய வேண்டிய தேவையுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்ய இன் னொரு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத் திடம் நாம் கூறியிருந்தோம். 

இதுபற்றி நாம் ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியப்படுத்தி யிருந்தோம். ஆனால் அங்கிருந்து எந்தப் பதி லும் வரவில்லை. 

சேர் டெஸ்மன்ட் டி சில்வா மற்றும் பாகிஸ் தான், இந்திய நிபுணர்களின் ஆலோசனைப் படி காணாமற்போன 2000 பேர் தொடர் பிலான ஆவணப்படுத்தல் மேற்கொள்ளப்பட் டுள்ளது. 

இவர்களுடன் ஒருமுறை சந்தித்துப் பேசியுள்ளதுடன், தொலைபேசி வழியாக அவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள் கின்றோம். 

காணாமற்போனோர் தொடர்பி லான 2000 முறைப்பாடுகள் குறித்து சர்வ தேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டங்களுக்கு அமைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடிக் கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிகிறது. 

புதிய அரசாங்கம் விசாரணைகளைத் தொடர விரும்பினால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்கா லத்தை நீடிக்க வேண்டும். 

இப்போது எமது பணி தொடர்பான சுருக்க அறிக்கை ஒன் றைத் தயாரித்துள்ளதுடன், நல்லிணக்க ஆணைக் குழுவின் சாட்சியங்களை உள்ளடக்கியதாக அறிக்கை ஒன்றையும் நாம் கையளிக்கவு ள்ளோம்.

போரின்போது காணாமற்போன  படை யினர் குறித்த 5000 முறைப்பாடுகள் தொடர் பில் நாம் இன்னமும் ஆய்வு செய்யவில்லை. 

போரின் போது காணாமற்போன  படையி னர் பெரும்பாலும் கொல்லப்பட்டிருக்கலாம். அவர்களின் உடல்களை விடுதலைப் புலி கள் எரித்திருக்கலாம் அல்லது காட்டு விலங்கு கள் தின்றிருக்கலாம். 

அதில் நிறைய வேலை கள் உள்ளது. எனவே அந்த முறைப்பாடுகள் தொடர்பில் நாம் இன்னமும் ஆய்வு செய்ய வில்லை. 

போரின் போது காணாமற்போன 300 பேருக்கு மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குமாறு அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்து ள்ளது. அவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் அரசாங்க  அதிபர்களுக்கு நாம் பரிந்துரைத்துள்ளோம். 

அதேவேளை, மரண அத்தாட்சிப் பத்தி ரம் பெறுவதற்கு போரின் போது அவர்கள்  பொலி ஸாரிடம்  அல்லது செஞ்சிலுவைச் சங்கத் திடம் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். அவ் வாறு செய்யப்பட்டிருந்தால்  தான் எம்மால் அதற்கு பரிந்துரை செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

ad

ad