புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015



றிவித்ததற்கு மாறாக ஒரு நாள் முன்னதாகவே கடந்த 28ஆம் தேதியன்று அரசுப் பேருந்து ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் இறங்க.. தமிழகம்
முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் நொந்துபோனார்கள். 

ஓட்டிக்கொண்டிருந்த பேருந்துகளை பாதிவழியில் நிறுத்திவிட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க... பயணிகள் திகைத்துப் போனார்கள். முதல் ஷிப்ட்டில் வழக்கம்போல பேருந்துகளை எடுத்த ஓட்டுநர்கள், ஒற்றை நடையை முடித்தவுடனோ அல்லது இரட்டை நடை முடிந்தவுடனோ, பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, ஆங்காங்கே திடீரென வண்டிகளை நிறுத்தி விட்டார்கள். அடுத்தடுத்து எதிர்பார்த்த பேருந்துகள் வராமல் போக.. தனியார் பேருந்துகள், ஆட்டோக்களில் 3 மடங்கு முதல் 5 மடங்குவரை கட்டணம் கொடுத்து வீடுபோய்ச் சேர்ந்தார்கள். அரசு அதிகாரிகளே தனியார் பேருந்துகளின் முகவர்கள், தரகர்களுக்கு இணையான திறமைகாட்டி தனியார் வண்டிகளை இயக்கவைத்தனர். மறுநாளும் அவதியோஅவதி இன்னும் கூடியது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற பெரிய நகரங்களில் பாதிப்பின் அளவு கொஞ்சம் இல்லை, அதிக அதிகம்..!

இன்னொரு பக்கம், அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.கள், பிரமுகர்களும் போராடிய ஊழியர்களிடம் தங்கள் திறமையைக் காட்டினர். 




திருச்சியில் கன்டோன்ட்மென்ட் பணிமனை முன் 28ஆம் தேதி அதிகாலை திரண்ட அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள், பேருந்துகளை இயக்கக் கோரி மற்ற தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தினார்கள். அவர்கள் மறுக்க.. வாக்குவாதம் பலமாக.. கைகலப்பில் முடிந்தது. அடுத்த நாள் காலையில், கொறடா மனோகரன், பரஞ்சோதி ஆகிய எம்.எல்.ஏ.கள் பேருந்துகளை இயக்குமாறு தொழி லாளர்களை வற்புறுத்தினார்கள். அ.தி.மு.க. சங்கத்தினரே தலையை மட்டும் ஆட்டிவிட்டு, நகராமல் சமாளித்தனர். 

துவாக்குடியில் 8 லாரி ஓட்டுநர்களை அழைத்து வந்தார், அ.தி.மு.க. நகரச் செயலாளர் பாண்டியன். தொழிற் சங்கத்தினர் கடுமையாக எதிர்க்க, லாரி ஓட்டுநர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பெரம்பலூர் பணிமனையில் ஞாயிறு மாலை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட,  போலீஸ் படையுடன் வந்த 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தக்கூடாது என மிரட்டினர். 

புதுக்கோட்டை பேருந்துநிலைய டிப்போவில் அமைச் சர்கள் விஜயபாஸ்கர், சுப்பிரமணியன் இருவரும், மற்ற ஊர்களைவிட வித்தியாசமாக திறமை காட்டினர். 1ஆம் நம்பர் வழித்தடத்தில் ஒருவரை ஒரு முறை ஓட்டவைத்துவிட்டு, ஒரு நடை முடிந்ததும், அந்தப் பேருந்திலிருந்து இறக்கி, வேறு வழித்தடங்களில் ஓட்டவைத்து, எல்லா வழித்தடங்களிலும் பேருந்து ஓடியதாகக் காட்ட முயற்சி செய்தார்கள். 


""மயிலாடுதுறையில் இரண்டு நாட்களாக வண்டி ஓட்டி மேற்கொண்டு முடியாமல், ஓட்டமறுத்த அ.தி.மு.க. தொழிற் சங்கத்தினரை, முன்னாள் நகரச் செயலாளர் அலியும் அவருடன் வந்த கும்பலும் அடிக்கப் பாய்ந்தனர். வேதாரண்யம் பணிமனையில் ஞாயிறன்று கூடியிருந்த ஊழியர்களை, எம்.எல்.ஏ. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. நமச்சிவாயம், உடன்வந்த...

ad

ad