புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2015

புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்


புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை செயலிழந்து விட்டதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவையின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள், அமைச்சுக்குரிய நிறுவனங்கள் தொடர்பான விடயங்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை திங்கள் அல்லது அதற்கு அடுத்த நாள் பதவியேற்கும் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 30 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையை கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
அமைச்சரவையின் எண்ணிக்கை குறைப்படுவதால் அமைச்சர்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உதாரணமாக சுகாதார அமைச்சை எடுத்துக்கொண்டால் ஆயுர்வேதம் உட்பட அனைத்து சுகாதார துறையும் அதில் உள்ளடங்கும்.
கல்வி அமைச்சை எடுத்துக்கொண்டால் உயர்கல்வி, பாடசாலைகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கல்வி அமைச்சுகள் வரும். இப்படியான மாற்றம் புதிய அமைச்சரவையில் ஏற்படுத்தப்படும் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad