புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

நானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து
 முன்னேறியுள்ளோம் : வானொலியில் ஒபாமா மோடி இணைந்து உரை


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இணைந்து பங்கேற்ற சிறப்பு மன் கி பாத் நிகழ்ச்சி இன்று அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது 35 நிமிடங்கள் ஒலிபரப்பபட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம்  மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து  இருதலைவர்களும் உரையாற்றினார். 
 
 ஒபாமா பேசியதாவது: 

*ரேடியோ மூலம் மக்களுடன் பேசுவது பெருமையாக உள்ளது. 

* இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். 

*இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்த பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளோம். 

*இந்தியாவில் மோடியின் பணிகளை பார்த்து அமெரிக்க மக்கள் பெருமைப்படுகின்றனர். 

எனது குழந்தைகள் இந்தியாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா வரவும் அவர்கள் ஆசைப் படுகின்றனர். 

*இந்தியாவின் பெருமைப்பற்றி எனது குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன். 

*ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பின்னர் எனது குழந்தைகளுடன் இந்தியா வருவேன். 

*தொற்று நோய் பிரச்னை பற்றி மோடியுடன் பேசினேன். 

*பொதுவான பிரச்சினைகள் பற்றி நானும்மோடியும் பேசினோம். 

*நானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து முன்னேறியுள்ளோம். 

நாட்டு மக்கள் மீது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.

ad

ad