புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுடன் அருண்ஜெட்லி 40 நிமிடங்கள் ஆலோசனை




சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக போயஸ் கார்டனுக்கு புறப்பட்டு சென்றார்.

இரவு 8.30 மணியளவில் போயஸ் கார்டனை வந்தடைந்த அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன், அருண் ஜெட்லி சந்தித்த நிகழ்வு நேற்று அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பு குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ’’சென்னை வந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி,அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலி தாவை போயஸ் கார்டனில் நேற்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு 40 நிமிடம் நீடித்தது’’என்று தெரிவிக்கப்

ad

ad