புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2015

நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! ஒரு கோடியே 40 லட்சம் புத்தகங்கள் முற்றிலும் சேதம்




ரஷ்யாவில் நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

மாஸ்கோவில் உள்ள சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டது. 3வது மாடியில் பிடித்த தீ சற்று நேரத்தில் மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஏராளமான வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் காற்றின் வேகத்தில் கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மிக அரிய புத்தகங்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 40 லட்சம் புத்தகங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.

ad

ad