புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

மலாவியில் வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலி - 25 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் மலாவி நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள மலாவி ஆற்றில் வெள்ளம் பெருகி, பல்வேறு ஊர்களுக்குள் புகுந்தது. 

இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆப்ரிக்க கண்டத்தில் மொசாம்பிக் மற்றும் ஜாம்பியா நாடுகளுக்கு அருகே மலாவி நாடு அமைந்துள்ளது.

 குடியரசு நாடான மலாவியில் பீட்டர் முத்தாரிகா அதிபராக இருந்து வருகிறார். மலாவி நாட்டை சுற்றி மலாவி எனும் மிகப்பெரிய ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. மலாவி நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலாவி ஆற்றில் வெள்ளம் பெருகி, பல்வேறு மாவட்டங்களுக்குள் புகுந்தது.

இந்த மழை வெள்ளத்தில் ஆடு, மாடு பல்வேறு கால்நடைகள் செத்து மிதந்தன. பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வர்த்தக தலைநகரான பிளான்டியர் அருகே மாங்கோச்சி உட்பட 10 மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இப்பகுதிகளை சேர்ந்த சுமார் 48 பேர் மழை வெள்ளத்தில் பலியாகி விட்டனர்.

அப்பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தற்போதும் அப்பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று பிளான்டியர் மாவட்ட அதிகாரி க்ரே மெக்வான்டா கூறினார். 

வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவும் சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்று மலாவி அதிபர் பீட்டர் முத்தாரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad