புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2015

தேர்தல் தினத்தில் 500 கோடி ரூபாவை வங்கிகளில் இருந்து எடுத்த ராஜபக்ஷ புதல்வர்கள்


ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்து 500 கோடி ரூபா பணத்தை எடுத்துள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கை வங்கிகளில் 5ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இது குறித்து நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் கசிந்துள்ளது.
இந்த பெருந் தொகை பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவரது ஆலோனைக்கு அமையவே இந்த பணத்தை வங்கிகள் விடுத்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தால் தமது வங்கி கணக்குகள் முடக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ராஜபக்ஷவினர் தமது வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை அவசரமாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ad

ad