புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

இன்றைய பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளும் சமுர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபா 5000.00 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

யாழில் மக்கள் வெள்ளம்; சமுர்த்தி கொடுப்பனவா? மகிந்தவா? இன்றைய தினம் காலை முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி
மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்கின்றனர்.
 
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பணிகள் இன்று காலை யாழ்.குடாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த  நிகழ்விற்காக 450 இ.போ.ச பேருந்துகள் மக்களை பரப்புரை நடைபெறவுள்ள  இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
 
இ.போ.ச பேருந்துகளின் பெயர் பலகைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளின் பெயர் குறிப்பிட்ட அட்டை ஒட்டப்பட்டுள்ளது. 
 
இன்றைய பரப்புரை நிகழ்வில் கலந்து கொள்ளும் சமுர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபா 5000.00 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

ad

ad