புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2015

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் ஜனாதிபதி மாளிகை! புரட்சி ஏற்படும் அபாயம் (வீடியோ இணைப்பு)

ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது.
ஏமனில் கடந்த 2012ம் மக்கள் புரட்சி வெடிக்கவே, சர்வாதிகார ஆட்சி புரிந்த அலி அப்துல்லா சலே பதவி விலகி, அப்தராபுக் மன்சூர் ஹாடி என்பவர் ஜனாதிபதி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஹவுதீஸ் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜனாதிபதி ஹாடியும், அவரது அமைச்சர்களும் ஊழல் புரிந்து நாட்டை ஆண்டு வருவதாக குற்றம் சாட்டிவருவதுடன், பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய 7 நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில் சனாவில் நேற்று ஜனாதிபதி ஹாடி மாளிகையில் பார்வையாளர்களை சந்தித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஜனாதிபதி மாளிகை மீது வெடிகுண்டுகளை கிளர்ச்சியாளர்கள் வீசினர், இதனால் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இச்சூழலை பயன்படுத்தி கொண்டு உள்ளே நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், மாளிகையின் மூன்று வாயில்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வசப்படுத்தினர்.
தற்போது மாளிகை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைவர் அப்துல் மாலிக்–அல்–ஹவுதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஜனாதிபதி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இச்சண்டையில் இதுவரையிலும் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ad

ad