புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

சசின் வாசுக்கு சொந்தமாக ஐந்து விமானங்கள் மட்டும் பயிற்சி நிலையமும் உள்ளது



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஐந்து விமானங்களை கொள்வனவு செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோசடிகளுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின் பொறுப்பாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல கோடி அமெரிக்க டொலர் பணம் கொடுத்து இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

விமானம் செலுத்தும் பயிற்சி நிலையமொன்றை அமைக்கும் நோக்கில் இவ்வாறு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களை நிறுத்தி வைக்க ரத்மலானை விமான நிலையத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படுகின்றது.
ரத்மலானை விமான நிலையத்திற்கு, மாதமொன்றுக்கு வாடகையாக 415,000 ரூபா செலுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் வாடகை செலுத்தப்படவில்லை.
விமானிகளை பயிற்றுவிப்பதற்கான பயிற்சி பாடசாலையொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் 120 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
இவர்களிடம் மாதமொன்றுக்கு 13லட்ச ரூபா பணம் கட்டணமாக அறவீடு செய்;யப்பட்டுள்ளது.
எனினும், சான்றிதழ்களோ அல்லது பயிற்சியோ மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
சஜின் வாஸ் தனது அதிகாரத்தையும் பதவியையும் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ள சஜின் வாஸ், பணம் சம்பாதித்த வழிமுறைகளை விளக்க வேண்டும்.
சஜின் வாஸின் விமானங்கள் அமெரிக்காவின் டெக்ஸாஸில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடு குறித்து உரிய விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் சஜின் வாஸ் குறித்து நேற்று முறைப்பாடு செய்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad