புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு புதிய அரசியல் மாற்றத்திற்கு வழிசமைக்கும்


நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
 
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமைப்பு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்
டுள்ளது.
 
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது,
 
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இருப்பையும், அபிலாஷைகளையும் பலப்படுத்தும் அரசியல் வியூகத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை கூட்டமைப்பின்  இந்த அரசியல் தீர்மானம் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
 
2013ல் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலின்போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது.
 
மூலோபாய ரீதியாக இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனவரி 8 ஆந் திகதிக்குப் பின்னர் ஏற்படவுள்ள புதிய அரசியல் சூழலில் இந்த அரசியல் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad