புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

கே.பியை கைது செய்யக் கோரி நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல்


தமிழீழ விடுதலைப் புலிகள் இய க்கத்தின் முன்னாள் சர்வதேச பொறு ப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்ம நாதனுக்கு எதிராக மேன்முறையீ ட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக் கல் செய்யப்படவுள்ளது. ஜே.வி.பி இந்த மனுவைத் தாக் கல் செய்யவுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன், கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய் யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

எனினும் அவருக்கு எதிராக இது வரையில் சட்ட நடவடிக்கை எவை யும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர் இலங்கையில் புனர்வாழ் வளிக்கப்பட்டு கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

ஆனால் அவரிடம் பல கப்பல்களும், தங்க நகைகளும், நூற்றுக் கணக்கான வங்கி கணக்குகள் உள்ளிட்ட பல வியாபாரங்களும் இருக்கின்றன.

இவற்றில் இருந்து மகிந்த ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்ஷவும் அனுகூலகங்களை அனுபவித்ததன் பின்னர், அவருக்கு சொகு சான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்திருக் கின்றனர்.   நியாயப்படி அவரிடம் உள்ள சொத்து க்கள் அரசுடமையாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையிலேலேயே அவரை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க கோரி இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.   

ad

ad