புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம


யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் இன்று வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம் செய்து, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் சம்பிரதாய பூர்வமான சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன், அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் சி.வசீகரன், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் வ.மதுமதி, அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இச்சந்திப்பின் போது வடக்கு மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் தொடர்பான திட்டங்களுக்குத் தாம் உதவத் தயாராக இருப்பதாக துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

ad

ad