புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2015

மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்


மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் காணப்படுகின்றது.
மத்திய மாகாணசபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்க கடமையாற்றி வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து, மாகாணசபையின் அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபையில் அங்கம் வகிக்கும் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வைந்துள்ளனர்.
இதனால் வெகு விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரம் கைநழுவிப் போகும் என எதிர்பார்ப்பதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்த தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ரஞ்சித் அலுவிஹாரே தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad