புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

தயாநிதிமாறன் முன்னாள் தனிச் செயலாளருக்கு எதிரான சி.பி.ஐ. மனு தள்ளுபடி!

: பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. மனு தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது.

தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், பி.எஸ்.என்.எல்.லுக்கு சொந்தமான தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தவறாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, தயாநிதிமாறனின் முன்னாள் தனிச் செயலாளர் கவுதமன், தனியார் தொலைக்காட்சியின் கண்ணன், ரவி ஆகியோரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்தது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி சி.பி.ஐ. சார்பில், சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ.யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி கவுதமன், கண்ணன், ரவி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad