புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

தமிழர் மத்தியில் மைத்திரி உணர்வு இல்லை! மஹிந்த எதிர்ப்பு உணர்வு உள்ளது: ஹிந்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் 7 இலட்சம் வாக்குகள் முக்கியமானவை. எனினும் அந்த மக்கள் இதனை தமது தேர்தலாக கருதவில்லை என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரியுள்ளது.
தமிழர்கள் மத்தியில் மைத்திரி தொடர்பில் உணர்வு இல்லை எனினும் மஹிந்தவுக்கு எதிரான உணர்வு நிறைந்துள்ளது என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் மைத்திரிபாலவுக்கு தமிழர் அளிக்கும் வாக்குகள், மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வாக்குகளாகவே இருக்கும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்
இதேவேளை மைத்திரிபாலவுக்கு வாக்களிப்பதன் மூலம் இலங்கையின் மறைந்து போயுள்ள ஜனநாயக சூழலை மீண்டும் ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

ad

ad