புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2015

தேர்தல் தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் சென்னையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு!

வருகின்ற ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
 இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சிறீசேனா போட்டியிடயுள்ளார்.
எனினும் ஈழத்தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் இவ்விருகட்சியினரின் நிலைப்பாடும் தமிழர்களாகிய நமக்கு எதிராகவே உள்ளது. இது தொடர்பாக இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் காலை 11 மணியளவில் தமிழகம், புலம்பெயர்ந்த நாடு மற்றும் ஈழத்திலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந் நிகழ்வில் இணையதளத்தின் (skype) ஊடாகவும் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
இவ் பத்திரிகையாளர் சந்திப்பை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஏற்பாட்டில் மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந் நிகழ்வில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும் எழும் கேள்விகளுக்கு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கஜேந்திரன் செல்வராஜா – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
பேராசிரியர் சிறிரஞ்சன்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (கனடா)
நிர்மானுசன் பாலசுந்தரம் – அரசியல் ஆய்வாளர் / ஊடகவியாளர்
திருமுருகன் – மே பதினேழு இயக்கம்
பிரதீப் குமார் – மாற்றம்-மாணவர் இளையோர் இயக்கம்
சைதை சிவராமன் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மனோஜ் குமார் – தந்தை பெரியார் திராவிடர்கழகம்
ஆகியோர் பதிலளித்துள்ளனர் உள்ளனர்.
இறுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் கலந்து கொண்ட ஊகத்தினருக்கு பத்திரிகை அறிக்கை கொடுக்கப்பட்டது.

ad

ad