புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2015

சுனந்தாவின் மரணம் கொலைதான் என முடிவெடுத்தது எப்படி? சசிதரூர் கேள்வி!



சுனந்தாவின் மரணம் கொலைதான் என எந்தெந்த ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறை முடிவு செய்தது என்று சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சுனந்தா கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சுனந்தாவின் மரணத்தில் சதித் திட்டம் இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு, உண்மை வெளிப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். சுனந்தாவின் மரணம், கொலைதான் என எந்த அடிப்படையில் காவல்துறை முடிவுக்கு வந்தது என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று சசிதரூர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம், டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தா தற்கொலை செய்துகொண்டதாக அப்போது கூறப்பட்ட போதிலும், அவரது மரணத்தில் சர்ச்சை நீடித்து வந்தது. இந்தநிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சுனந்தாவின் மரண வழக்கை டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை ஆணையர், இறுதி அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில் சுனந்தா இயற்கையாக மரணம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. வாய் வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ விஷம் செலுத்தப்பட்டதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார். 

ad

ad