புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது; மகிந்த


எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

 
அண்மைக் காலமாக ஊடகங்களில் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக மிக மோசமான வகையில்  பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. 
 
கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி இராணுவ சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 
 
 
சில தரப்பினர் செய்து வரும் பிரச்சாரங்களைப் போன்று கடந்த 9ஆம் திகதி அதிகாலையில் அலரி மாளிகையில் இராணுவ சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 
 
இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சுமூகமான முறையில் நான் அலரி மாளிகையை விட்டு வெளியேறினேன். 
 
 
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் எனது குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான சேறு பூசல்கள் இடம்பெற்று வருகின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
அலரி மாளிகையின் உட்பகுதியில் மக்கள் பணத்தில் பாரியளவில் ஆடம்பர கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும்  பரப்புரை செய்யப்படுகின்றது.
 
எனினும் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களின் வசதி கருதி, கழிவறைகைளில் காற்று சீராக்கி பொருத்தப்பட்டது. 
 
எனது மனைவி தங்கம் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸாரே பதிலளித்துள்ளனர். அதனால் அது பற்றி பேசப் போவதில்லை. 
 
எனது அரசு ஊழல், விரயம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad