புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

லங்கையில் ஜனநாயகம்; ஒபாமா புது நம்பிக்கை



இலங்கையில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை போன்ற நாடுகளில் சி
றப்பான எதிர்காலம் உருவாவதற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின்  66 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகைதந்திருந்த  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது விஜயத்தின் இறுதி நாளான நேற்று செவ்வாய்க் கிழமை புதுடில்லி ஸ்ரீ போர்ட் அரங்கில் உரை நிழ்த்தும்போதே இவ்வாறு கூறியுள்ளதாக வெள்ளை மாளிகையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம்முறை இடம்பெற்ற தேர்தல்கள்  மூலமான அனுபவங்களைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளின் தேர்தல்களுக்கும் இந்தியா உதவ முடியுமென ஒபாமா நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புணர்வுடனேயே அதிகாரம் என்பது வரையறுக்கப்படுகின்றது என்பதனை நான் மிகவும் ஆணித்தரமாகக்  கூறுகின்றேன். இப்பிராந்தியத்தில் மியன்மார்முதல் இலங்கைவரையான நாடுகளில் சிறந்த எதிர்காலம் அமைவதற்கு இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஒபாமா  குறிப்பிட்டார். 
குறிப்பாக இலங்கையில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை உருவாகியுள்ள நிலையில் அங்கு சிறந்த எதிர்காலம் அமைய  இந்தியா தனது ஆதரவினை வழங்க வேண்டுமென ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

ad

ad