புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

தமிழர்களின் வாக்குகளால் மைத்திரியின் வெற்றி உறுதியானது


வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியைத்
தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
 
 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் (2010) 25.66 வீதமாக காணப்பட்ட யாழ் மாவட்ட மக்களின் வாக்களிப்பு இம்முறை 61 வீதமாக அதிகரித்துள்ளது.
 
வடமாகாணத்தில் இந்த முறை ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய தேர்தல் தொகுதிகள் அனைத்திலும் புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு  மகிந்தவை விட அதிக வாக்குகள் கிடைத்திருந்தன.
 
 
மூதூர் தேர்தல் தொகுதியிலும் இரு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குமிடையில் வாக்குகளின் எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் காணப்பட்டது.
 
வடக்கு மக்களின் வாக்குகளே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அதிக வாக்கு வித்தியாசம் ஏற்பட முக்கிய காரணமாகியது.
-

ad

ad