புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

அகதிகளை திருப்பி அனுப்பப் போகிறது இந்தியா?


இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. 
 
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அகதிகளை திருப்பி அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது.
 
இதையடுத்தே,வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இருதரப்புப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கப்படும் அகதிகளுக்கான மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு  நடவடிக்கைகளுக்கு உதவ, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கம் தெரிவித்துள்ளன.
 
இதேவேளை தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என இந்தியப் பிரதமரிடன்  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad