புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2015

ஒளிமயமான எதிர்காலத்திற்காக பின்னோக்கிச் செல்லாது முன்னோக்கிச் செல்வோம்; மன்னாரில் ஜனாதிபதி

 இங்கு 10 வருட காலமாக அமைச்சராக இருந்த ஒருவர் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து விட்டு மக்களுக்கு வழங்காமல் எதிரணிபக்கம் சென்று முனாபிக்காக
மாறிவிட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான மகிந்த ராஜபக்சவின் பிரச்சார கூட்டம் நேற்று மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது .அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மாற்றம் தொடர்பில் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
நாங்கள் ஒருபகுதிக்கு அமைச்சரை நியமித்தால் அவர் முழு நாட்டிற்கும் பொறுப்பாக இருக்க வேண்டும்.  அவர் எந்த இனத்துக்கோ, குலத்திற்கோ, மதத்திற்கோ மாத்திரமானவர் அல்ல. 
 
எனவே அரசைச் சேர்ந்த எந்த அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் இந்துவா, இஸ்லாமியர்களா,பௌத்தர்களா கத்தோலிக்கர்களா என்று பார்க்காது அனைவருக்கும் ஒரே சேவையினை செய்ய வேண்டும். 
 
இனவாதம், மதவாதத்தைத் தூண்டி விட்டு சேவை செய்யவும் முடியாது. இந்த நாட்டில் அதற்கு இடமுமளிக்கவும் முடியாது.
 
மதப்பிரச்சினை காரணமாக கஸ்ரப்பட்ட நாடுகளைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். பாகிஸ்தான், லிபியா, ஈராக் போன்ற பல நாடுகளைப் பாருங்கள் மதத்தின் காரணமாகவே மிகவும் கஸ்ரப்படுகின்றன.
 
கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மாகாணம் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும். எனினும் இப்பகுதி மக்கள் எந்தப்பிரச்சினைகளும் இல்லாமல் சந்தோசமாக வாழும் சூழல்  தற்போது ஏற்பட்டுள்ளது. 
 
இப்போது பயமின்றி பள்ளிவாசல் , தேவாலயங்களுக்கு செல்ல முடியும். இருள் சூழ்ந்த கடந்த கால சம்பவங்களை பலர் மறந்து விட்டார்கள். எனவே எல்லோரும் ஒன்றுபட்டு சகோதரர்கள் போல ஒரு நாடாக முன்னே செல்ல வேண்டிய தேவை தற்போது வந்துள்ளது. 
 
இங்குள்ள மக்களுக்கு அபிவிருத்திகள் கிடைக்கவில்லை, காணிகள் இன்றி மக்கள் இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு அபிவிருத்திகள் கிடைத்துள்ளன, ஏக்கர் கணக்கில் காணிகள் கிடைத்துள்ளன.
 
அவ்வாறான சந்தர்ப்பத்திற்கு நாங்கள் அனுமதி வழங்காதபோது அவர்கள் எங்களுடன் கோபப்பட்டார்கள்.  நீங்கள் இப்பகுதியில் ஏழைகளாக மாறும்போது அவர்கள் மட்டும் எவ்வாறு கோடீஸ்வரர்களாக மாறினார்கள்? இதனை மக்களாகிய நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்.
 
இங்குள்ள முஸ்லிம் மக்களே உங்களுடைய பெறுமதியான வாக்குகளை எந்தவொரு முதலாளிகளுக்கும் ஏலத்தில் விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
 
30 வருட கால இருண்ட யுகம் முடிந்து விட்டது. நாங்கள்  பட்ட கஸ்ரங்கள் போதும் இனிமேல் அனைவருடனும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். 
 
இன ரீதியான பிரச்சினை இருக்கலாம், மீனவ குடும்பங்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கலாம். எனினும் அவை எல்லாவற்றையும் வெகுவிரைவில் தீர்த்து வைப்போம்.
 
எந்த இனத்திற்கும் இன்னொரு இனத்தை அடிமையாக்க முடியாது. இது எமது தாய் நாடு .நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் போல நாங்கள் வாழ வேண்டும். 
 
இலவசக்கல்வியை இல்லாமல் செய்வதற்கு எதிர்க்கட்சி முயற்சி செய்கின்றது. பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்து கல்வி கற்க முயற்சிக்கின்றார்கள். அவர்களுடைய தேர்தல் விஞ்ஞானபனத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதனால் எமது அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
 
எனவே நாங்கள் ஒருபோதும் இலவசக் கல்வியை மாற்ற இடமளிக்க மாட்டோம். அதனால் எங்களுடன் நீங்கள் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.
 
உங்களுக்காக வடக்கின் வசந்தத்தின் மூலம் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளோம். இன்னும் இன்னும் செய்வோம். 
 
நாங்கள் அதிகளவு செலவு செய்யும் மாகாணம் வடக்கு மாகாணம் தான். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதிலும் அதிக நிதி ஒதுக்கி உள்ளோம். 
 
உங்கள் பிரதேசம் இனிமேல் கஸ்ரமான பிரதேசமாகவோ , பின்தங்கிய  இடமாக இருக்க முடியாது.  எவ்வித பேதமும் வேண்டாம்.
 
தவறான  பொய்ப்பிரச்சாரங்களும் வேண்டாம்.  பயங்கரவாதமும் வேண்டாம். யார் யார் எந்தப்பக்கம் போனாலும் நான் உங்கள் பக்கம் தான்.  இன்றுள்ள அபிவிருத்தி மேலும் தொடர்ந்தால் இன்னும் நாங்கள் முன்னேற முடியும்.
 
எனவே ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கு நாங்கள்  பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.  
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=822253775204514594#sthash.xmESCdsM.dpuf

ad

ad