புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

பிள்ளையானுக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் எம்மிடம் கூற வேண்டும்: சுஜீவ சேனசிங்க


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானக்கு பாதுகாப்பு பிரச்சினை என்றால் அதனை எம்மிடம் முறையாக கூற வேண்டுமென பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக ஒவ்வொரு இடத்தில் சென்று சொல்லிப் புலம்புவதில் பயனில்லை. பாதுகாப்பு குறைக்கப்படவில்லை.
முன்னாள் பிரதி நீதி அமைச்சருக்கு 15 – 20 வரையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனக்கு ஆறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அதிலும் இரண்டு பேர் மட்டுமெ என்னுடன் இருக்கின்றார்கள்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களை எனக்கு பணி விடை செய்யும் சேவகர்களாக்க முடியாது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புடைசூழ பொய் பகட்டுக்காக பயணம் செய்யும் காலம் முடிவடைந்து விட்டது.
மக்களின் பணமும் சேமிக்கப்பட்டுள்ளதுடன், நல்லாட்சியில் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
புலிகளினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிள்ளையான் முறைப்பாடு செய்கின்றாரே இது பற்றி உங்களது கருத்து என்ன என சுஜீவ சேனசிங்கவிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

ad

ad