புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

அலரி மாளிகையில் மகிந்த பதுக்கி வைத்திருந்த பணம், நகைகள் அம்பலம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு புதிதாக கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றபின்னர் நேற்று அலரிமாளிகையில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
நேற்றுமாலை தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச் சுற்றிப் பார்க்க அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு பெரும் தொகையான நகைகள், 500 மில்லியன் ரூபா வரையிலான பணம் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதுடன், அக்கட்டிடங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக அவை அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், அங்கு ஆயிரக்கணக்கான கணினிகள், அதற்குரிய மல்ரி பிரின்டேஸ் என்பன பெருந்தொகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பல்வேறு முக்கிய கோப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.
இவற்றைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த பெண்கள் விவகார பிரதியமைச்சர் மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
மகிந்த குடும்பம் அனைத்தையும் கைவிட்டு,உயிரை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.அவர்களை இவ்வாறு விரட்டியடித்தது, உயிரிழந்த தமிழ் மக்களின் ஆத்மாக்களே.ராஜபக்சவினர் காப்பெட் வீதிகள் அமைத்தது போக்குவரத்தை இலகுபடுத்தவல்ல.மண்ணில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் வெளித்தெரியாமல் இருப்பதற்கே என்றார்.

ad

ad