புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

அலரி மாளிகையை விட்டு மஹிந்த முறையாகவே வெளியேறினார் ரணிலுடன் கடைசி நேரம் பேச்சு

மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
அவரது அரச மாளிகையில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் முழு நாடும் அராஜக நிலைக்கு சென்று இரத்த களறி ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் மனமாற்றம் அடைந்தது நாட்டை ஒரு அனர்தத்தில் இருந்து பாதுகாக்க கிடைத்த அதிஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.
விக்டர் ஐவன், ஜனாதிபதி மற்றும் அவது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் அவர்களின் அரசியல் முறைகேடுகள் குறித்தும் தகவல்களை வெளியிட்டு கடந்த சில மாதங்களாக ஜனாதிபதிக்கு எதிராக நாட்டு மக்கள் மத்தியில் நிலைப்பாடு ஒன்றை உருவாக்கினார்.
பலம் பொருந்திய ராஜபக்ஷவினருக்கு எதிராக எவரும் வாய்த்திறக்க அஞ்சிய நேரத்தில் ஊடகவியலாளர் என்ற வகையில் விக்டர் ஐவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த- ரணிலுடன் கடைசி நேரம்
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.
மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
ரணிலுடன் கடைசி நேரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டுச் செல்வதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது வாசஸ்தலத்துக்கு அழைத்து, அந்த கடைசித் தருணங்களில் சகல அதிகாரங்களையும் அவரிடம் முறையாக ஒப்படைத்து விட்டே அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad