புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

மகேஸ்வரி நிதியத்தின் இணக்கத்தால் கைவிடப்பட்டது ஆர்ப்பாட்டம்


news
பாரவூர்தி உரிமையாளர்களது அங்கத்துவ பணத்தை மீளவும் கொடுப்பதற்கு மகேஸ்வரி நிதியம் இணக்கம் தெரிவித்தமையால் யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கம் இன்று  நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டதாக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
 
மேலும் மணல் ஏற்றி இறக்குவதற்கு மகேஸ்வரி நிதியத்தில் பாரவூர்தியாளர்கள் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்ததை அடுத்து 2010ஆம் ஆண்டு பாரவூர்தி ஒவ்வொன்றுக்கும் 5ஆயிரம் ரூபா வீதம் அங்கத்துவ பணம் செலுத்தப்பட்டிருந்தது.இதில் அங்கத்தவர்களாக 500 இற்கும் மேற்பட்ட பாரவூர்தி உரிமையாளர்கள் இணைந்து கொண்டனர்.
 
 
இந்த நிலையில் 5 ஆண்டுகளாக மணல் ஏற்றி இறக்குவது தொடர்பில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.இதனால் பாரவூர்தி உரிமையாளர்கள்  அங்கத்துவ பணத்தை மீளத் தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
 
இதேவேளை பாரவூர்தி உரிமையாளர்களது அங்கத்துவ பணம் மகேஸ்வரி நிதயத்தின் உறுதிப்பாட்டிற்கிணங்க பெப்ரவரி 2ஆம் திகதி மீளளிக்கப்படாவிடில் பாரவூர்தி உரிமையாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
-

ad

ad