புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

அம்பாந்தோட்டையில் உதித்த அந்தச் சூரிய சந்திரர் எங்கே?


அலரி மாளிகையிலிருந்து ஆட்சி செய்த மகிந்த வர்மன் தன் பிறந்த ஊராகிய அம்பாந்தோட்டைக்குச் சென்றபோது  அம்பாந் தோட்டை மக்கள் ஓ! என்று கண் ணீர் விட்டுக் கதறினர்.

ஏற்கனவே அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக, மகிந்த ராஜபக்­ கூட்டிய அமைச்சரவையில் இதுதான் நான் கூட்டும் கடைசி அமைச்சரவை என்று மகிந்த சொன்ன போது அமைச்சர்கள்  கண்ணீர் விட்டு அழுதனர்.

மகிந்தவின் தோல்வி தென்பகுதியில் பலத்த கவலையை ஏற்படுத்தியது என்ற உண்மையை மறுப் பதற்கில்லை. எனினும் அம்பாந்தோட்டை மக்கள் அழுத கண்ணீருக்கும் அயோத்தி மக்கள் அழுத கண்ணீருக்கும் வேறுபாடுண்டு.

இராமர் காடு சென்ற போது அயோத்தி  மக்கள் அழுதனர். அயோத்தியில் வாழ்ந்த இராமர் காட்டில் துன்பப்பட போகின்றாரே என்ற கவலையே அயோத்தி மக்களின்  அழுகைக்குக் காரணம். 

ஆனால் மகிந்த ராஜபக்­ தனது பிறந்த ஊரான அம்பாந்தோட்டைக்குச் சென்றபோது அம்பாந்தோட்டை மக்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். பிறந்த ஊருக்கு வந்தால் அழுவதா என்ன? நம் பிள்ளை நம் ஊருக்கு வந்து விட்டான் என்று ஆறுதல் அடைய வேண்டும் எனினும் அது நடக்கவில்லை.                     

இதைக் கூறும்போது இங்கு யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகப் பொருள் கொள்ளாதீர்கள்.  மாறுபாடாகப்பொருள் கொண்டால், அழுகையின் ஒப்பிடுகை மட்டுமே இது என்று ஆறுதல் கொள்ளுங்கள்.

மகிந்தவின் கவலை
தனது பிறந்த ஊரான அம்பாந் தோட்டைக்கு மகிந்த ராஜபக்­ சென்ற போது அவரின் தோல்விக்கு ஆறு தல் சொல்லச் சென்றவர்களிடம்  தமிழர்கள் என்னைத்   தோற்கடித்து விட் டனர் என ஆதங்கப்பட்டார் மகிந்த.

2015 ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தன்னைத் தோற்கடித்து விட்ட னர் என்று கூறிய மகிந்த, நன்றியுணர்வு மிக்கவராக இருந்திருந்தால், 2005 ஆம்  ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில்  நான் வெற்றி பெறுவதற்குத் தமிழர்களே  காரண மாக இருந்தனர் என்றும் அவர் கூறி யிருப்பார்.

எனினும் அவர் அவ்வாறு கூறாத தையிட்டுப் பரவாயில்லை. மகிந்த ராஜபக்­வை யார் ஜனாதிபதியாக ஆக்கினரோ, அவர்களே அவரை வீட்டிற்கும் அனுப்பி வைத்தனர் என்பதில்  எந்த அநீதியும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கு மேலாக, மகிந்த ராஜபக் ­வின் கவலையயல்லாம் இன்னும் இரண்டுவருடங்கள் ஆள  வேண்டிய காலத்தையும் இழந்து போனது தான்.

ஜனாதிபதிப் பதவியில் இன்னும் இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு இரு தடவைகள் ஜனாதிபதியாக இருந்துவிட்டேன்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர்  இரண்டு தடவைகள் மட்டுமே  ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் அப் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் எனக் கூறிவிட்டு, மகிந்த ராஜபக்­ அம்பாந்தோட்டைக்குச் சென் றிருந்தால், எங்கள் தலைமகன் தாய் மண் திரும்புகிறான்; விடுதலைப்புலி களை  வென்ற சூரிய சந்திரன் தாய் வீடு வருகிறான் என்றெல்லாம் புகழ் ஒலி வானுயர ஒலித்திருக்கும். தென் பகுதி முழுவதிலும்  மகிந்த ராஜபக்வுக்குப் பாராட்டும் கெளரவிப்புமாக விழாக்கோலம் பூண்டிருக்கும்.

என்ன செய்வது எழுதாக் குறைக்கு அழுதால் தீருமோ! என்ற வள்ளலாரின் தத்துவம் மகிந்தவின் வாழ்விலும் வேலை செய்துவிட்டது.

விடுதலைப்புலிகளை வென்ற சூரிய சந்திரன் என்ற கெளரவத் தோடு வீடு செல்லவேண்டிய மகிந் தவை சிங்கள, தமிழ்மக்கள் சேர்ந்து  கழுத்தைப் பிடித்துத்  தள்ளி ஓடு... வீட்டிற்கு... என்று அனுப்பி னரே! இந்தக் கவலை மகிந்தவின்  ஆயுளுக்கு உலை வைக்கும் என்று கூறினால் அதில் நிறைந்த உளவி யல் உண்மை உண்டெனலாம்.

நாடு முழுவதிலும் கட்டவுட். நீங் களே சூரியசந்திரர்... என்ற புகழ் வார்த்தை. இப்படி இருந்த மகிந்த எப்படி ஆனார். ஆம்,  மகிந்தவின் கட்டவுட்டுகள் அகற்றப்படுகின்றன. எங்கே? இலங்கையின் சூரிய சந்தி ரன் என்று அந்தச் சூரியனும் சந்திர னும் கேட்டு நகைக்கின்றனர்.

ஓ! மகிந்த ராஜபக்­! ஜனநாயக நாட்டில் ஏன் இந்தப் படோபகாரம்.  வாழ்வானது மாயம். மண்ணாவது திண்ணம் என்ற தத்துவத்தை உண ராமல்  உம்மைப் பார்த்து, சூரிய சந்திரர் என்று ஒரு மாங்காய் மடை யன் பாடினானே! அவனுக்குத் தெரி யுமா சந்திரனும் தேய்வதுண்டு, சூரிய னும் கிரகணத்திற்கு ஆட்படுவ துண்டு. எங்களுக்கே இக்கதியயன் றால்,  ராஜபக்­வின் மகனாகிய நீ மட்டும் எப்படி சூரிய சந்திரராக இருக்க முடியும். அவன் பாட்டெழுதினால் நீர் அதை காட்சிப்படுத்துவதா என்ன? இப்படி சூரிய சந்திரர் முணுமுணுப் பது போலத் தெரிகிறது.

மகிந்த விட்ட தவறு

விடுதலைப்புலிகளுடன் போர் நடத்திய மகிந்த ராஜபக்­ புலிகளை வெற்றியீட்டிய பின்னர் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஆற் றுப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அவர் அதைச்செய்ய வில்லை.  நான் சொல்வதைத்தான் தமிழ் மக்கள் கேட்டாகவேண்டும் என்பது மகிந்தவின் நிலைப்பாடாக இருந்தது.

வீதிகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள் என்பவற் றின் கட்டுமானத்தில் மகிந்த ராஜ பக்­ தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாயினும் மகிந்த  புனரமைத்த வீதியில் பயணிக்கு போது, என் மகன் எங்கே? என்று  ஏங்கி அழும் தாய்க்கு வீதியின் அலங்கரிப்பை ரசிக்க முடியுமா என்ன? எனவே முதலில் உயிருக்கு உத்தரவாதம், அதன்பின்னர் அடிப்ப டைத்  தேவைகள் என்ற விடய த்தை மகிந்த மறந்தே போனார்.

வடக்கு மாகாண சபைத் தேர் தல் நடைபெற்றபோது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற் றியீட்டியது.  அந்த வெற்றியை மகிந்த ராஜபக்­ மதித்திருக்க வேண்டும்.

அந்தப் பக்குவத்திற்கு அவர் பழக்கப்படவில்லை என்று வாதம்புரிவோர்;  இந்த நாட்டின் நீதியரசராக இருந்த ஒரு உயர்ந்த மனிதரன்றோ! வடக்கின் முதலமைச்சர்.

அவரையாவது மதித்து- அவரின் கோரிக்கைகளை ஏற்று  செயற்பட்டிருக்கலாம் அல்லவா! அதைக்கூட மகிந்த செய்யவில்லை.

வடக்கின் முதலமைச்சர் தனி நாடா கேட்டார்? இல்லவே இல்லை. வடக்கின் ஆளுநர் சந்திரசிறியை மாற்றுங்கள் என்பதே முதலமைச் சரின் கோரிக்கை. அந்தக் கோரிக் கையை க்கூட மகிந்த நிறைவேற்றவில்லை.

ஆளுநரின் பதவிக்காலம் முடி புற்ற போதாவது சந்திரசிறியை மாற்றியிருக்கலாமல்லவா? அதைச் செய்வதற்கும் மகிந்தவின் ஆணவம் விடவில்லை.

 அதன்முடிவு, முதலில்  நீ வீட் டிற்குப்போ! பின்னால் சந்திரசிறி வீடுபோவார் என்பது விதியா யிற்று. விதியை வெல்வார் யார் உளர். எல்லாம் அவன் திருவுளமே
.

ad

ad