புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2015

தமிழருக்கான பாதுகாப்பில் நெருக்குதல் தோன்றலாம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை




நாட்டில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துப் பராமரிக்கப் போகும் இக்கட்டான
சூழ்நிலையிலேயே வாழ்ந்து வரவேண்டியிருக்கும் என வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

அனலைதீவு பிரதேச வைத்தியசாலை யில் வெளிநோயாளர் பிரிவு கட்டடத்திறப்பு விழா நேற்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று வடகிழக்கு இலங்கையானது ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறது. எமது வேட்டினால் இந்த நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த நாங்கள் தற்பொழுது எமது வாக்கினால் அதைச் சாதித்திருக்கின்றோம் எனப்படுகின்றது.

எமது வாழ்க்கை முறையில் இனி மாற்ற ங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த் துப் பராமரிக்கப் போகும் ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வர வேண்டி யிருக்கும் என்பது எனது கணிப்பு.

நெருக்கு தல்கள், தேவைகள் இருந்தால்தான் எம்மை நாடித் தேடி நலங்கள் பல கொழும்பில் இரு ந்து வரக் கூடும் என்பதும் அவை அற்ற நிலை யில் பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைக்குத் தள்ளப்படக் கூடும் என்ற ஒரு எண்ணமும் எழாமல் இல்லை.

இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் வெளி நோயாளர் பிரிவு கட்டிடம் பல நாட்களாக நாங் கள் யாவரும் வேண்டி நின்ற ஒரு தேவை.

அதைப் ப+ர்த்தி செய்துள்ளார் வைத்திய கலா நிதி கிருபானந்தன். எமது வைத் தியத் துறை அமைச்சருடன் கலந்துற வாடியே இக் கட்டிடம் கட்டித் தரப்பட்டுள்ளது. வருங் காலத்தில் நாம் எமது வட மாகாணத்தை திட்டமிட்டே முன்னேற்ற வேண்டும்.

அரசாங்கம் இதுவரை காலமும் கொடு த்ததை விடக் கூடிய செலவுகள் எம் சார்பில் கையளிக்க முன்வந்தாலும் எமக்கிருக்கும் தேவைகள் பல மடங்கானவை.

நாங்கள் ஒரு கொடிய போரின் பிடிகளில் இருந்து விடு பட்டு வந்தவர்கள். எமக்கான தேவைகள் நாட்டின் மற்றைய இடங்களில் காணப்படும் மற்றைய தேவைகளிலும் இருந்து வேறு பட்டு இருக்கலாம். வேறுபட்டவை.

இவற்றை எல்லாம் கணித்து எப்பேர்ப்பட்ட அபிவிருத்தி களைச் செய்ய வேண்டும் என்று கோருவது எமது வடமாகாணசபையையும் எமது அலு வலர்களையும்; சேர்ந்த ஒரு பணி என்பதை நான் உணர்கின்றேன்.

விரைவில் தேவை கள் சார்ந்த ஆராய்வு நடைபெற்று வடமாகாணத்திற்கென ஒரு திறமைத் திட்டம் வகுக்க ப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். எமது புலம் பெயர்ந்த உறவுகள் அந்தத் திறமைத் திட்ட அடிப்படையில் எமது தேவைகளைப் ப+ர்த்தி செய்ய முன்வர வேண்டும்.

நான் வெளிநாடுகளுக்குப் போன காலங் களில் பலர் என்னிடம் எடுத்துக் கூறியது தாம் செலவு செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் ஆனால் தாம் செலவுக்குத் தரும் பணம் மக்க ளைப் போய் அடைகின்றனவா மத்தியில் உள்ளவர் மடியை நிரப்புகின்றனவா என்ப தில் தமக்குப் பலத்த சந்தேகம் இருப்பதாக. இது உண்மை.

பல சந்தர்ப்பங்களில் உரிய வர்களுக்கு உதவிகள் சென்றடைவதில்லை. மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய நாங்கள் கட்டுப்பாடுள்ள கட்டுமானங்களை கருத்துடன் உருவாக்க வேண்டும்.

அண்மை யில் எமது அமைச்சர்கள் இருவர் கிளிநொச்சி யிலும் வவுனியாவிலும் செய்த வெள்ள நிவா ரணப் பணிகள் எல்லோராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. நடுவில் இருந்து கடத்திச் செல்லாமல் மக்கள் நலம் விரும்பி நல்ல முறையில் நலக் கொடுப்பனவுகள் நடைபெற்ற தாகக் கூறப்பட்டது.

எமது வடமாகாணசபை உறுப்பினர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் மக் கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். விரை வில் அவர்கள் ஒவ்வொருவருக்கும், (எனக்குந் தான்) தலா அறுபது இலட்சம் மக்கள் சேவை க்காக ஒதுக்கப்படும். திட்டமிட்டு மக்கள் நலம் கருதி ஒவ்வொரு சதமும் பாவிக்கப்பட நாம் யாவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அனலைதீவின் அபிவிருத்தியில் கரி சனை கொண்ட யாவரும் ஒருங்கிணைந்து உங்கள் பிரதேச சபையினூடாக அல்லது மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாக எம க்கு உங்கள் தேவைகளைத் தெரியப்படுத்து ங்கள்.

முக்கியமாகத் தெருக்கள், பாடசாலை கள், ஆலயங்கள், கிணறுகள், நீர்நிலைகள் போன்றனவற்றைப் புனர் அமைக்கத் தேவை யான செலவுகள் பற்றி எமக்குத் தெரிய ப்படுத்துங்கள்.

புதிதாகத் தொடங்கக் கூடிய கைத் தொழில்கள் பற்றி அறிவியுங்கள். உள்ர் போக்குவரத்து பற்றி அறிவியுங்கள்.

எமது மாகாணத்தின் தேவைகள் பற்றிய திறமைத் திட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் அலகி னால் எப்பொழுது செய்து முடிக்கப்படுமோ தெரியாது.

ஆனால் உங்கள் உடனடித் தேவை களை நீங்கள் தெரியப்படுத்தினால் எம்மால் முடிந்தவற்றை நாங்கள் சாதிப்போம் என அவர் தெரிவித்தார்.                

ad

ad