ஞாயிறு, ஜனவரி 04, 2015

புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட ரணிலிடம் இருந்து மகிந்தவுக்கு அழைப்பு


எதிர்காலத்தில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல், சிவில் சமூகம் என அனைத்து தரப்பினரும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஒரே மேடையில் இணைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் மாவட்டம் தொடங்கஸ்லந்த மற்றும் மாவத்தகம ஆகிய தேர்தல் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தர் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.