புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை: சனத் ஜெயசூரியா கவலை



இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவதால், அணி நெருக்கடியில் இருப்பதாக தெரிவு குழு தலைவர் சனத் ஜெயசூரியா கவலை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் மோதி வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நாளை நெல்சனில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இலங்கை அணியின் பந்துவீச்சு பற்றி அந்த அணியின் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜெயசூரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அணியில் பந்துவீச்சாளர்கள் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மலிங்கா இன்னும் குணமடையவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் கூட அவர் விளையாட முடியாமல் போகலாம். அதே போல மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் கூட காயத்தால் அவதிப்படுகிறார்.
இந்த நிலைமையில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது உள்ள பந்து வீச்சாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உலகக்கிண்ண தொடர் நெருங்கும் இந்த தருணத்தில் நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ad

ad