புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2015

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலை விரிக்கும் அரசாங்கம்! ஆளுக்கு நூறு கோடி பேரம

ஆளுங்கட்சியின் சரிந்து போயிருக்கும் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இவர்களில் சஜித் பிரேமதாச, ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, விஜேதாச ராஜபக்ஷ, ரங்கே பண்டார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணியின் பெயரும் இந்தப் பட்டியலில் அடிபடுகின்றது.
குறைந்தது எதிர்க்கட்சியின் பத்து முக்கியஸ்தர்களையேனும் ஆளுங்கட்சிக்கு அழைத்துவந்து அரசாங்கத்தின் செல்வாக்கை தூக்கி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் தீவிர முனைப்பில் உள்ளனர்.
இவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு தாவும் பட்சத்தில் தலா நூறு கோடி ரூபா வரை அன்பளிப்பாக கொடுக்க தயார் என்று அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
மேலும் சஜித் பிரேமதாசவுக்கு அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பிரதிப் பிரதமர் பதவியும், ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை ஹரினுக்கு அளிப்பதாகவும் ஆசை காட்டப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் செல்வாக்கில்லாத திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐநூறு கோடி மற்றும் இரண்டு பெறுமதியான வாகனங்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, தமக்கு வெறுமனே நூறு கோடி பேரம் பேசும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு சில முக்கியஸ்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனினும் அவர்களை சமாதானப்படுத்தி அரச தரப்புக்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

ad

ad