புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2015

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற மகிந்த முன்வைக்கும் வாக்குறுதிகள் எவை?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் தேர்தல் பிரசாரம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. 
தேர்தல் பிரசாரத்திற்கு அப்பால் காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தல், நிலையான தேசம் தொடரும் முன்னேற்றம் குறித்த கருத்துக்களம் என்பவற்றிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் என்ற நிலையில் தேர்தல் பிரசாரத்தில் மிகக் கடுமையாக ஈடுபட வேண்டியுள்ள நேரத்தில், யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ செலவிடுவது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.

காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத சேவை மற்றும் கருத்துக்களம் என்பன, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் காத்திரமான செல்வாக்கைச் செலுத்தும் என்று கூறி விட முடியாது.

மாறாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ யாழ்ப்பாணத்தில் நடத்தும் தேர்தல் பிரசாரம் தமிழ் மக்களை தனது பக்கம் திசை திருப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமையலாம்.

இதை நாம் கூறும் போது ஏற்கெனவே எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அணியினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில்  தேர்தல் பிரசாரம் செய்துள்ள நிலையில்-மைத்திரிபால சிறிசேனவுக்கே தமது ஆதரவு எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேளையில்,தமிழ் மக்களின் வாக்குளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டா? என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.

அத்தகையதொரு கேள்வி நியாயமாயினும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னமும் நிறையவே உண்டு.

அதாவது இன்று யாழ்ப்பாணத்தில்; தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ முக்கியமான சில வாக்குறுதிகளை வழங்க வேண்டும். அதில்

I.தமிழ் மக்களின் சொந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டு சகல இடங்களிலும் மீள்குடியேற்றம் நடத்தப்படும்.

இதற்காக தமிழ் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். தமிழ் மக்களின் மீள் குடிய மர்வு இக்கணமே நடைமுறைக்கு வரும்.

II.இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளுடன் உடனடியாக தீர்வு காணப்படும்.

III.வடக்கு மாகாண அரசு சகல அதிகாரங்களுடன் இயங்க அனுமதிப்பதுடன் வடக்கு மாகாண அரசு விரும்புகின்ற ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் என்பது போன்ற விட யங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தனது வாக் குறுதிகளாக அறிவிக்கும் போது, தமிழ் மக்கள் நிச்சயமாக தமது வாக்களிப்புத் தொடர்பில் உறுதியான முடிவுகளை எடுப்பர்.

இதைவிடுத்து, ஒரே தேசம்; ஒரேநாடு; நாம் எல்லோரும் இந்த நாட்டின் மக்கள் என்றவாறான பிரசாரங்கள் தமிழ் மக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமே அன்றி வேறெதையும் ஏற்படுத்த மாட்டா.

எனவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்கக் கூடிய வலிமை மைத்திரியை விட தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கே அதிகம் என்பதால், இன்றைய தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் வாக்குறுதிகள் எவை என்பதைப் பொறுத்தே ஜனாதிபதித் தேர்தலில்  யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் எடுப்பர்.

ad

ad