புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2015

மிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை என்னால் சீரணிக்க முடியவில்லை -!மஹிந்த


இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களில் வாக்குப்பலத்தால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தார்.
இந்நிலையில் தமிழர்கள் அளித்த தோல்வியை ஏற்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த மஹிந்த முடிவுகள் முழுமையாக வெளிவருதற்குள் அலரி மாளிகையில் இருந்து நள்ளிரவே அவசர அவசரமாக வெளியேறினார்.
கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மெகமுல்லனாவில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற ராஜபக்சே அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
வடக்கு, கிழக்கு, மற்றும் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எதிராக வாக்களித்ததே தமது தோல்விக்கு காரணம் என்று கூறினார். இருப்பினும் தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது. இதனை ஒரு தோல்வியாக தாம் கருதவில்லை என்று தெரிவித்தார்.
சிங்களர்களை விட்டு அதிகாரம் இன்னும் செல்லவில்லை என்று கூறிய மஹிந்த தனது தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை என்றும் மறைமுகமாக தெரிவித்தார்.
இதனிடையே இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad