புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

சரத் பொன்சேகாவுக்கு பூரண மன்னிப்பு! மீண்டும் ஜெனரலானார்


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை முற்றாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இதனடிப்படையில், சரத் பொன்சேகாவுக்கு இன்று முதல் ஜெனரல் பதவி மற்றும் இராணுவத்தில் வழங்கப்பட்ட பட்டங்கள், பதக்கங்கள், ஓய்வூதியம் என்பன மீண்டும் வழங்கப்பட உள்ளன.
சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி முப்படை தளபதியாக செயற்பட்டதுடன் இராணுவ நடவடிக்கைக்கு பொன்சேகா தலைமை தாங்கினார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகாவை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பழிவாங்கியதுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதித்தது. அத்துடன் அவரது குடியுரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.
வெள்ளக்கொடி உட்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டபோதும் அவர் இராணுவத்தில் வகித்த ஜெனரல் என்ற பதவியும் பறிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட கௌரவங்கள் யாவும் வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad