புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2015

கோல்கீப்பர் எப்படி செயற்பட்டார் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை மானுவல் நூயர் கவலை


உலகின் சிறந்த காற்பந்து வீரர்களுக்கான விருது கோல் கீப்பர்களுக்கு கிடைப்பதில்லை என்று ஜேர்மனி அணியின் கோல் கீப்பர் நூயர் கவலை தெரிவித்துள் ளார்.

சர்வதேச காற்பந்து கூட்டமை ப்பு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த காற்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது இறுதி பட்டியலில் போர் த்துக்கல் வீரர் ரொனால்டோ, ஆர் ஜென்டீனாவின் மெஸ்ஸி மற்றும் உலகக்கிண்ணம் வென்ற ஜேர் மனி அணி கோல்கீப்பர் மானுவல் நூயர் இடம் பெற்றனர்.

இதில் ரொனால்டோ முதலிடம் (37.66 சதவீதம்) பெற்று விருதை தட்டிச் சென்றார். மெஸ்ஸி (15.76), நூயர் (15.72) அடுத்த இரு இடங்கள் பெற்றனர்.

இது குறித்து மானுவல் நூயர் கூறுகையில், சிறந்த விருதை பெற, காற்பந்து என்று வரும் போது, எத்தனை கோல் அடித்தீர்கள்’ என்று தான் கேட்பர்.

ஆனால் கோல்கீப்பர் எப்படி செயற்பட்டார் என்பதை யாரும் கண்டு கொள்வது கிடையாது. திற மையாக விளையாடும் பட்சத்தில் ஏதாவது ஒரு வகையில் விருது கிடைக்கும்.

இதன் அடிப்படையில் தான் நான் ‘பிபா’ 2014 உலக லெவன் அணியின் கோல்கீப்பராக தெரிவு செய்யப்பட்டேன் என்று கூறியுள் ளார்.     

ad

ad