புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2015

தணிக்கை குழுவினர் ராஜினாமாவுக்கு நான் காரணம் அல்ல: சர்ச்சை சாமியார்


இந்தியில் வெளியான ‘மெசஞ்சர் ஆப் காட்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் சான்று அளிக்க மறுத்து விட்டனர். ஆனால் தணிக்கை தீர்ப்பாயம் அனுமதி அளித்து விட்டது. இதையடுத்து வாரிய தலைவர் லீலா சாம்சனும், உறுப்பினர்கள் ஒன்பது பேரும் ராஜினாமா செய்தார்கள். இது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 

மெசஞ்சர் ஆப் காட் படத்தை அரியானாவில் செயல்பட்டு வரும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சர்ச்சை சாமியாருமான குர்மீத் ராம் ரகீம் சிங் எழுதி இயக்கியுள்ளார். இவரே இதில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த படம் தமிழில் இறைவனின் தூதர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. 

தமிழ் பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா சென்னை அமிஞ்சிகரையில் உள்ள தியேட்டரில் நடந்தது. இதில் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– 

‘மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் மதம் தொடர்பான காட்சிகள் எதுவும் இல்லை. யாரையும் புண்படுத்தும் வசனங்களும் கிடையாது. பாதி கதையில் உண்மை இருக்கும். மீதி கதை கற்பனையாக சித்திரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. பின்னர் மத்திய தணிக்கை தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றேன். இந்த படத்துக்கும் தணிக்கை வாரிய தலைவர் ராஜினாமா செய்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

என் பட பிரச்சினையில்தான் தலைவர் பதவியில் இருந்து லீலா சாம்சன் விலகினாரா என்பது எனக்கு தெரியாது. என் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க மத்திய அரசின் தலையீடு ஏதும் இருந்தது இல்லை. அரசியல்வாதிகளிடம் உதவியும் கேட்கவில்லை’’என்று கூறினார்.

ad

ad