புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2015

வலி.வடக்கு மக்களை சந்திக்கிறார் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர்


வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுவுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள தற்போதைய நிலைமைகளை ஆராய்வதில் மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 
 
அதனடிப்படையில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வெயர் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
 
இன்று கொழும்பு வரும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்  உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு நாளைய தினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். கொழும்பிலிருந்து விசேட விமான மூலம் யாழ். வரும் அவர் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ad

ad