புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2015

கிழக்கு மாகாணம் கூட்டமைப்பின் ஆட்சிக்கு வரும்: எஸ்.தண்டாயுதபாணி


கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மாகாணத்தின் புதிய அரசாங்கத்தினை அமைக்கும் என மாகாண சபை உறுப்பினர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
இன்று கிழக்கு மாகாண சபையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த டிசம்பர் மாதம் ஒப்புவிக்க வேண்டிய வரவு செலவுத் திட்டம் அன்றைய தினம் அரசாங்கத்தின் ஒவ்வாத நடவடிக்கை காரணமாகவே ஒப்புவிக்கப்பட்டது.
நேர்மையாக நடத்தியிருந்தால் அன்றைய தினமே வாக்களிப்பினை நடத்தியிருக்க முடியும். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் நலனை எதிர்பார்த்துத்தான் அந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில் புதிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் ஆட்சியில் இருந்த சில அரசியல் கட்சிகள் அந்த ஆட்சியில் இருந்து விலகியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று சில கட்சிகள் அதில் இருந்து விலகி பொது எதிரணியின் வேட்பாளரை ஆதரித்த நிலையில் தற்போது ஆட்சியில் உள்ளவர்களிடம் பெரும்பான்மை பலம் இல்லாத சூழ்நிலையிலேயே இன்று அமர்வு நடைபெற்றது.
இன்று சபை அமாவுகள் ஆரம்பிக்கமுன்பாக கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் ஆளும் கட்சி பலமற்ற நிலையில் உள்ளதால் வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பிக்க முடியாத தார்மீகம் உள்ளது.
எனவே சபையின் அமர்வினை ஒருவாரத்துக்கு பின்னர் நடத்துமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம். இந்த நிலையில் மாகாண சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உயரதிகாரிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டாலே இந்தனை செயற்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆளுனருக்கு உள்ள சில அதிகாரங்களை பயன்படுத்தி இது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கலாம் என்பதை நாங்கள் இதன்போது சுட்டிக்காட்டினோம்.
20ஆம் திகதிக்கு முதல் அதிகார மாற்றத்தினை நாங்கள் செவ்வனே செய்யமுடியும். அதன் பின்னர் புதிய அதிகாரத்தினைப்பெறும்போது தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் மாற்றங்களை செய்து அதனை சமர்ப்பிப்பார்கள்.
எதிர்வரும் 20ஆம் திகதி கிழக்கு மாகாணசபையினை புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்.அந்த புதிய அரசாங்கத்தில் யார் பங்களிக்கப் போகின்றார்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்.
மத்திய அரசாங்கம் என்பது வேறு கிழக்கு மாகாணசபை என்பது வேறு.மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்ற நோக்கோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.கிழக்கு மாகாணசபையில் அவ்வாறு கருதமுடியாது.
கிழக்கு மாகாணசபை எங்கள் கட்டுப்பாட்டிலும் பெரும்பான்மை பலத்தோடும் உள்ளது. அதனால் ஆட்சியமைக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது.
கிழக்கு மாகாணசபையில் தற்போது பெரும்பான்மை பலத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ளது.எனவே எதிர்வரும் மாகாண அமைச்சரவையிலும் எங்கள் உறுப்பினர்கள் இருப்பார்கள்.
இந்த ஆட்சிமாற்றத்துக்கு பங்களிப்பு செய்யும் கட்சிகளுக்கும் அதிகாரங்கள் பங்கீடு செய்யப்படும். இது தொடர்பில் எமது தலைப்பீடம் ஆராய்ந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். மக்களின் நலன்களை முன்னிறுத்தக் கூடியவர்களுடனேயே எங்கள் கட்சி இருக்கும்.
கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகார மாற்றத்தில் பிரதான கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும். ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில், நேர்மையான முறையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ad

ad