புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

புங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி


புலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தயாபரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன், வன்னேரிப் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் மகேஸ், விவேகானந்தநகர் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கலந்துகொண்ட அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன் கருத்து தெரிவிக்கையில்,
போர்க்கால எச்சங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வாழ்க்கையில் மாறுதல் தரக்கூடிய ஒரு காரியம்தான் ஆற்றலுடைய கல்வியை முயற்சியோடு கற்றல். எமது மண்ணின் சொத்தான கல்வியை காப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் அர்ப்பணிப்பு செய்யவேண்டியுள்ளது.
நிலத்தில் இடையறாத முயற்சியின் மூலம் கல்வியை தொடரும் எங்கள் வாழ்க்கையும் இதற்காக பொருளாதாரத்தில் நலிந்திருக்கும் எங்களுக்காக கருணைகாட்டும் நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் போன்ற அமைப்புக்களின் செயற்பாடும் அர்ப்பணிப்புக்களே.
இதன் பலாபலன்களை நாம் எதிர்காலத்தின் அனுபவிக்கலாம்.அப்போது ஆற்றலுடைய பிறரால் ஏமாற்றப்படாத தந்திரம் மிக்க ஒரு தமிழ் சமுதாயம் இங்கு இருப்பதை காணலாம் என்றார்.

ad

ad