புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

அடுத்தடுத்து அதிர்ச்சியை சந்திக்கும் கிரிக்கெட் உலகம்: 
பாகிஸ்தான் வீரர் நெஞ்சில் பந்து தாக்கியதில் மரணம்!

பாகிஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜீஷன் முகமது நெஞ்சில் பந்து தாக்கியதில் மரணமடைந்து உள்ளார்.  கடந்த 2 மாதங்களில் நடந்துள்ள 3வது சம்பவம் இது.

பாகிஸ்தானை சேர்ந்த 18 வயதான இளம் வீரர் ஜீஷன் முகமது கராச்சி நகரில் உள்ள ஒராங்கி பகுதியில் நடந்த கிளப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.  அவர் தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை எதிர்கொள்ளும் முன்பாக அவரது மார்பில் வேகமாக பந்து பட்டுள்ளது.

இதனை அடுத்து சரிந்து விழுந்த அவரை ஒராங்கி டவுனில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.  இது குறித்து டாக்டர் சமது கூறுகையில், வேக பந்து வீச்சில் தாக்கப்பட்ட அவர் மைதானத் திலேயே விழுந்து விட்டதாக எங்களிடம் கூறினர் என கூறியுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ், சீன் அபோட் வீசிய வேக பந்தை எதிர்கொள்கையில் அது தலையில் பட்டது.  இதனால் ஹியூஸ் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலேயே சரிந்து விழுந்து நினைவிழந்தார்.  அவர் மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி மரணம் அடைந்தார்.

உலக கிரிக்கெட்டுக்கு இது பேரிழப்பு.  இது நடந்த 2 தினங்களில், இஸ்ரேல் நாட்டில் நடுவர் ஹில்லெல் ஆஸ்கர் என்ற முன்னாள் இஸ்ரேல் கிரிக்கெட் வீரர் பந்து தலையில் தாக்கியதில் மரணமடைந்தார்.  கடந்த 2 மாதங்களில் நடந்த 3வது சம்பவத்தால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேனியல் ஹியூஸ் என்பர் மீதும் பந்து தலையில் பட்டு தாக்கியதில் அவர் நினைவிழந்தார்.  ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்து உள்ளார்.

ad

ad