புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்

தேமுதிகவில் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது.
சென்னைக்கு அடுத்ததாக கோவையில் செயற்குழுவை நடத்தியதால் கொங்கு மண்டலத்தின் மீது தேமுதிக தலைமை அதிக கவனம் செலுத்துவதாக, அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
அதிமுக பாணியில், விரைவில் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நிர்வாகிகள் தகவல் கூறினர்.
ஆனால், கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பதோடு, கட்சியை விட்டு விலகுவதாகவும் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இவர்களில் முக்கியமானவர், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலர் மாதம்பட்டி தங்கவேலு. இவர், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர்.
இதுபற்றி அவர் கூறியதாவது, மாவட்டச் செயலர் பாண்டியன், கட்சி நிர்வாகிகளை மதிப்பதே இல்லை, தன்னிச்சையாகச் செயல்படுகிறார். கட்சியை அழிவுப் பாதைக்கு அவர் கொண்டு செல்கிறார் என்று பல முறை கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பினோம், நேரிலும் தலைவரைப் பார்த்து விடயத்தைச் சொன்னோம். எதற்குமே நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு அரசியலில் அங்கீகாரம் கொடுத்த விஜயகாந்துக்கு நன்றி. வேறு கட்சியில் சேர்வது பற்றி முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தொண்டாமுத்துார் தொகுதி முன்னாள் துணைச் செயலர் தேவராஜ், ஒன்றிய துணைச் செயலர் முத்து நடராஜ், இளைஞரணி செயலர் கதிர்வேல், ஒன்றிய விஜயகாந்த் மன்ற துணைச் செயலர் கோவிந்தசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் தீபராஜ், கருப்பசாமி, அசோக்குமார், மகளிரணி செயலர் சுமதி, பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி உட்பட நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களுடன், 300க்கும் மேற்பட்ட தொண்டர்களும் சேர்ந்து கட்சியை விட்டு விலகுவதாக கடிதம் எழுதி, தலைமைக்கு அனுப்பியுள்ளதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதனால் தேமுதிகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad