புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2015

மஹிந்த குடும்பத்தினுள் குழப்பம்! நாமலுடன் தனியாக வசிக்கும் ஷிரந்தி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினுள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தனியாகப் புறப்பட்டு ஹம்பாந்தோட்டைக்குப் புறப்பட்டுள்ளார்.
அவர் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றடைந்த பின்னரும் ஷிரந்தி ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குப் போகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் கொழும்பு அருகேயுள்ள ஒரு மாளிகையில் தனது மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுடன் ஷிரந்தி தனியாக வசித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தவுக்கு நெருக்கமான சிலர் ஷிரந்தியை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே புனித பாப்பரசரின் வருகையின் போது அவரைச் சந்திக்கும் சாக்கில் ஷிரந்தியுடன் சமாதானமாகும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கத்தோலிக்க மதத்தவரான தனது மனைவி தன்னுடன் இணைந்து பாப்பரசரை சந்திக்க வரக் கூடும் என்று எதிர்பார்த்த மஹிந்தவுக்கு கடைசியில் ஏமாற்றமே எஞ்சியுள்ளது.
அதன் காரணமாக மஹிந்த தனியாகவே சென்று பாப்பரசரை சந்தித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசாங்க விடயங்களில் முக்கியத்துவம் வழங்கியமை காரணமாகவே மஹிந்த தோற்றுப் போக காரணமாக அமைந்தது என்பதுதான் ஷிரந்தியின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
2005ம் ஆண்டின் ஆரம்பம் தொட்டே கோத்தபாய மற்றும் பசில் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad