புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ... வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர


யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்வது குறித்து புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை  இந்தியா ஆதரிக்கும் என எதிர்பார்பாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் 18வது திருத்தத்தை நீக்குவதன் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 13வது திருத்தம் குறித்து எச்சரிக்கையான விதத்தில் பதிலளித்துள்ள அவர், தமிழ் மக்களின் நிலங்கள் அவர்களிடமே ஓப்படைக்கப்படும், ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை இலங்கை பாணி அரேபிய வசந்தம் என குறிப்பிட்டுள்ள அவர், ஆட்சி மாற்றம் வெளியுலகிற்கு தென்படுகின்ற மாதிரி இலகுவானதாக அமையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்வதன் மூலமாக சதிப்புரட்சி முயற்சிக்கு முயன்றார். எனினும் எமது படையினர் எம்முடன் இருந்தனர்.
அன்றைய இரவு குறித்து முழுமையான விசாரணைகள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம் தனது அயல்நாட்டுடன் நட்புறவை மீள ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவமளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad