புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2015

வடக்கில் படையினர் செயற்படும் விதம் குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி


வடக்கில் பாதுகாப்பு படையினர் செயற்படும் விதம் பற்றிய அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்கவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், பாதுகாப்பு தரப்பினர் செயற்படும் விதம், முகாம்களின் எண்ணிக்கை, படையினர் மேற்கொண்டு வரும் பணிகள் உட்பட பல விடயங்கள் குறித்து அறிக்கை தருமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களில் சேவையாற்றி வரும் படையினர் தொடர்ந்தும் அந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்டனர். எந்த காரணத்தை கொண்டு படையினரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
உயர் பாதுகாப்பு வலயங்கள், முகாம்கள் அமைந்திருந்த பிரதேசங்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் இராணுவத்தின் கீழ் இருந்து வந்தது. இதில் சுமார் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வடபகுதி மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad