புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2015

மகிந்த, கோத்தா, மேலும் இருவருக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு இன்று வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பணிப்பாளரிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.
முறைப்பாட்டினைக் கையளித்த பின்னர் அமைச்சர் மங்கள சமரவீர தனது சட்டத்தரணிகளுடன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வாக்கும் எண்ணும் பணி ஆரம்பமாகியதும் நள்ளிரவு 1 மணிக்கு அந்த செயற்பாட்டினைக் குழப்புவதற்கு எடுத்த நடவடிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இந் நடவடிக்கையை தேர்தல் ஆணையாளர் தேசப்பிரியவும், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டத்திணைக்களத்தின் பணிப்பாளரும் வன்மையாக எதிர்த்து நின்றுள்ளனர்.
அத்துடன் தேர்தல் ஆணையாளர் அலுவலகம், மற்றும் வாக்கு எண்னும் அலுவலகங்களை பணாகொட இராணுவ முகாமைக் கொண்டு சுற்றிவளைப்பதற்கும் அங்கு கலகங்களை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
இவ்வாறு செய்ய முயன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணிகள் முலம் முறைப்பாட்டை கையளித்தாக கூறினார்.

ad

ad