புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2015

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது,,மைத்திரிபால சிறிசேன


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவது பொருத்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அந்த கட்சியின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதால், முதலமைச்சர் பதவி தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இரா.சம்பந்தன் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன் எந்த இணக்கப்பாடும் அதில் எட்டப்படவில்லை.
37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு 7 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர்.

ad

ad