புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2015

டில்சான் சதம்: முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை..

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2அவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை
அணி வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முன்னதாக நியூசிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 11 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்ச் நகரில் நடைபெற்றதோடு இதில்; நியூசிலாந்து 3 விக்கெட்டுகளால் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவுப் போட்டியாக ஹெமில்டன் சீடன் அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த நிலையில் இருந்தன. நியூசிலாந்து அணித்த லைவர் மெக்கலம் மாத்திரம் தனது பொறுமையான ஆட்டத்தால் சதம் அடித்தார்.
12 பவுண்டரி, 5 சிக்சர் என விளாசிய மெக்கலம் 99 பந்துகளில் 117 ஓட்டங்கள் குவித்து அணியின் ஓட்டங்களை சற்று உயர்த்தினார்.
இலங்கை தரப்பில், சேனாநாயக, ஹேரத் தலா 2 விக்கெட்டுகளையும், குலசேகர, ஜீவன் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 249 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கருணாரத்ன, டில்ஷான் களமிறங்கினர். கருணாரத்ன 21 ஓட்டங்களில் வெளியேற சங்கக்காரா டில்ஷானுடன் கைகோர்த்தார்.
ஆரம்பத்திலே அதிரடி காட்டிய சங்கக்காரா 3 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய  ஜயவர்த்தன 27 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
மறுமுனையில் பொறுமையான ஆட்டத்தை விளையாடிய டில்ஷான் சதம் அடித்தார். இவர் 17 பவுண்டரி உட்பட 116 ஓட்டங்கள் குவித்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.
இவர் ஹென்றி பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மெத்யூஸின் (39 ஓட்டங்கள்) பொறுமையான ஆட்டத்தால் இலங்கை அணி 47.4 ஓவர்களிலே இலக்கை எட்டியது.
அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 252 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் முதல் ஒருநாள் போட்டியில் சந்தித்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுத்துள்ளது.

ad

ad